Kanavey

கனவே நீ இல்லையேல் உலகம் இது இல்லையே
இரு கண்ணுக்குள்ளே கூடு கட்டி வாழ்கிறாய்
இந்த இதயத்தில் நீ மட்டும் ஆள்கிறாய்
தினம் இன்பங்களை துன்பங்களை சேர்த்து தந்து
நீ வாழ்க்கையே என்கிறாய்

மண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொடத் தொடத் துரத்துகிறாய்
வானத்தை பிடித்து மேகத்தை உடுத்த
ஆசையை நீட்டுகிறாய்

கனவில் வசிப்பதும் ஒரு சுகம் தான்
வலியும் கூட இங்கு ஒரு வரம் தான்
கனவு காணா கண்கள் எங்கும்
இல்லையே

மண்ணில் உள்ள .....

என்னன்னவோ மனதிலே விதைப்பாய்
விதைத்ததைக் கொஞ்சம் வளர்ப்பாய்
வளர்ந்ததை விரும்பியே கலைப்பாய்
உனக்கிது அழகா?

என்ன சொல்லி என்ன செய்ய
உன்னை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லையே
மண்ணில் வந்து பிறந்ததும்
இறந்திடும் வரை யாரும்
காண உந்தன் பிள்ளையே

கனவில் பாடும் பாடல் அதை கேட்டு
காலை எழுந்து போகுதே மேற்கு
புதிய விடியலை கண்களில் சேர்த்து
வைத்திங்கு கனவுகள் காண்போமே

மண்ணில் உள்ள மனிதன் ....

நூலில் ஆடும் பொம்மை போல ஆடுகிறோம்
எங்கள் நூலை உந்தன் கையில் வந்து தேடுகிறோம்
அங்கும் இங்கும் காற்றில் ஆடி நீந்துகிறோம்
அனுதினம் வாடினோம் ஆயினும் நாடினோம்

உணவைப் போலே உன்னை உண்டோம்
உன்னை தவிர என்னக் கண்டோம்
மனித வேதனைக்கு கனவினைப் போல் ஒரு
மருந்தினை யார் தருவார்

மண்ணில் உள்ள மனிதன் ....

கனவே நீ இல்லையேல்.. உலகம் இது இல்லையே..

Otros artistas de Religious